திருநெல்வேலியில் இருந்து மதுரை, சென்னை,கோவை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள், வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடை எண்: 4-ல் இருந்து இயக்கப்பட்டு வந்தன. இனி, இந்த பேருந்துகள், பெருமாள்புரம் பிரதான சாலையில் காவல் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். நாளை (ஜன.2-ம் தேதி) முதல், பேருந்து நிலைய கட்டுமான பணி நிறைவுறும் வரை, இந்த நடைமுறை அமலில் இருக்கும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago