மிருகண்டா நதி அணை திறப்பு

By செய்திப்பிரிவு

மிருகண்டா நதி அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே மிருகண்டா நதி அணை உள்ளது. 22.97 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 20.01 அடியாகவும், அணையில் 70.713 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

இந்நிலையில் அணையை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச் சந்திரன் நேற்று மாலை திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர் கூறும்போது, “மிருகண்டா நதி அணையில் இருந்து வரும் 7-ம் தேதி வரை தொடர்ந்து 7 நாட் களுக்கு விநாடிக்கு 94 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன்மூலம் காந்தா பாளையம், சிறுவள்ளூர், நல்லான் பிள்ளைபெற்றால், கேட்ட வரம்பாளையம், வில்வாரணி, எலத்தூர், அம்மாபுரம் உள்ளிட்ட அணைக்கட்டுகளின் கீழ் பயன்பெறும் 17 ஏரிகள் மற்றும் அணைக்கட்டு மூலம் 3,190 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற உள்ளது” என்றார்.

இதில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்