காரைக்கால் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், அம்மாள்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சிலை, அதன் பீடம் ஆகியவற்றை நேற்று தூய்மை செய்தனர். சிலையையொட்டி அமைந்துள்ள மைதானத்தில் மண்டியிருந்த புதர்கள், குப்பை ஆகியவற்றையும் அகற்றினர்.
பள்ளித் தலைமையாசிரியர் பொன்.சவுந்தரராஜன், தேசிய மாணவர் படை அதிகாரி எல்.ரமேஷ்குமார் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் இப்பணியை மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago