திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், முக்கிய விழாவான பரமபத வாசல் திறப்பு எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை(டிச.25) அதிகாலை நடைபெற உள்ளது. இந்நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. அன்று காலை 8 மணி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாக அலுவலர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago