காரைக்கால்: காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
காரைக்கால் நகராட்சி திடலில் இயங்கி வந்த காய்கறி வாரச் சந்தை, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டுள்ளது. தற்போது, அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில், நகராட்சிக்கு வருவாய் தரக்கூடிய காய்கறி வாரச்சந்தை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், சிறு வியாபாரிகள் முதல் அனைத்து வியாபாரிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வாரச் சந்தை செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்.
இதேபோல, காரைக்காலில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியாளர்களால் திறந்துவைக்கப்பட்ட புதிய நேரு மார்க்கெட் வளாகத்தை பொங்கல் பண்டிகைக்குள்ளாக பயன்பாட்டுக்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், வியாபாரிகளையும், பொதுமக்களையும் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago