நளன் தீர்த்தத்தை ஸ்பிரே முறையில் பக்தர்கள் மீது தெளிக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் க.தேவமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வரும் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு, நளன் தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்களில் நீராட தடை என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருநள்ளாறு என்றாலே பக்தர்கள் தங்களின் தோஷம் விலகுவதற்கு நளன் குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். குளத்தில் தண்ணீர் விடுவது சரியானதல்ல என மாவட்ட நிர்வாகம் கருதினால், குளக்கரையில் குழாய் அமைத்து, நீரை ஸ்பிரே முறையில் பக்தர்கள் மீது தெளிக்க ஏற்பாடு செய்யலாம். இதனால் வரக்கூடிய பக்தர்கள் முழு திருப்தியுடன் திரும்புவதுடன், நளன் குளத்தை நம்பி கடைகளை அமைத்துள்ள சிறு வியாபாரிகளும் பயனடைவர் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்