அமராவதி பாலத்தின் அணுகுசாலை பகுதி ஆக்கிரமிப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு

By செய்திப்பிரிவு

கரூர்: கரூர், திருமாநிலையூர் இடையே அமராவதி ஆற்றில் புதிய பாலம் கட்டப்பட்டு 2000-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இதில், கரூர் லைட்ஹவுஸ் முனை பகுதியில் பாலத்தின் அணுகுசாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன் தலைமையில் நேற்று ஆய்வு நடைபெற்றது. இதில் நகராட்சி வரைப்படங்கள் மூலம் ஆக்கிரமிப்பை கண்டறியும் பணி நடைபெற்றது.

நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் செந்தில்குமரன், கரூர் நகராட்சி ஆணையர் வி.எம்.சுதா, நகர நிலவரித் திட்ட தனி வட்டாட்சியர் செந்தில் உள்ளிட்டோர் ஆய்வின்போது உடனிருந்தனர். அப்போது பாலத்தின் அணுகுசாலை கைப்பிடி சுவரை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடம் கண்டறியப்பட்டு, அதில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி குறியீடு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்