அரியலூர்: அரியலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களாக 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
சம்பளம் வழங்காததைக் கண்டித்தும், உடனடியாக சம்பளம் வழங்கக் கோரியும், பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை (பிஎப்) வழங்கக் கோரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று அரியலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago