சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:
குளிர் காலம் தொடங்குவதால் குறைந்தபட்ச வெப்பநிலை மிகவும் குறைவாக பதிவாகி வருகிறது. இது வழக்கமான நிகழ்வுதான். வழக்கத்தைவிட குறைவான குளிர் பதிவாகவில்லை.
13-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மலைப் பிரதேசங்களான உதகையில் 6.4 டிகிரி, கொடைக்கானலில் 8.9 டிகிரி, குன்னூரில் 9 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப்பரப்பு பகுதிகளான தருமபுரியில் 17.5 டிகிரி, வேலூரில் 18.6 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவ வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago