புதிய நாடாளுமன்றம் யாரை காக்க? கமல்ஹாசன் கேள்வி

By செய்திப்பிரிவு

கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் இழந்த சூழலில் புதிய நாடாளுமன்றம் கட்டுவது யாரை காக்க என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அடிக்கல் நாட்டினார்.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்று மன்னர்கள் கூறினார்கள்.

அதேபோல, கரோனாவால் இங்கு மக்களின் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம்கோடியில் நாடாளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க?

பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே.

இவ்வாறு ட்விட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்