காரைக்குடி கார்த்திகேயன் தொடக்கப் பள்ளி ஆசிரியரும், கவிஞருமான பா.தென்றல் எழுதிய “நீசமாக எண்ணாதே நீச்சல் அடிக்கக் கற்றுக்கொடு” என்ற நூல் வெளியீட்டு விழா நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நடந்தது.
விழாவுக்கு கோ.ஆனந்தா தலைமை வகித்தார். சையது முன்னிலை வகித்தார். சரவணன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சொ.சுப்பையா நூலை வெளியிட்டார். திருச்சி டொமினிக் பள்ளித் தாளாளர் எமர் சன் ஜெல்சிங் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். கவிஞர்கள் தங்கம்மூர்த்தி, தமிழ்மதி நாகராசன், முனைவர் ரா.வனிதா, பேராசிரியர் அரச.முருகுபாண்டியன் ஆகியோர் பேசினர். கவிஞர் பா.தென்றல் ஏற்புரையாற்றினார். கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago