தேனி மாவட்டத்தில் ரூ.2.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணி களை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
தேனி அன்னஞ்சி புறவழிச் சாலையில் 10 ஏக்கர் பரப் பளவில் தொழில்நுட்பப் பூங்கா அமைய உள்ளது. தேனி அரண் மனைப்புதூரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாலம் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனை துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
அதைத்தொடர்ந்து அரண் மனைப்புதூர் ஊராட்சியில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், சீலையம்பட்டியில் ரூ.8.75 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை, போடி நகராட்சியின் 4 இடங்களில் தலா ரூ.10 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையங்கள், ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 நுண்ணுயிர் உரக்கலவை கூடங் கள் என மொத்தம் ரூ.2.04 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
தேனி எம்.பி., ப.ரவீந்திரநாத் குமார், ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ், கம்பம் எம்எல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஊராட்சித் தலைவர் க.ப்ரிதா, மாவட்ட வன அலுவலர் எஸ்.கவுதம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பெ.திலகவதி, சார்ஆட்சியர் டி.சிநேகா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago