தனியார் பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கில் புகுந்த பேருந்து

By செய்திப்பிரிவு

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்து மதுக்கரை நோக்கி நேற்று பயணிகளுடன் புறப்பட்டது. ஆத்துப்பாலம் சாலை நோக்கி வேகமாக சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்களை இடித்து தள்ளிவிட்டு, அருகே உள்ள பெட்ரோல் பங்க் வளாகத்துக்குள் பாய்ந்து தூணில் மோதி நின்றது. பேருந்து மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற கிணத்துக்கடவைச் சேர்ந்த ராஜமாணிக்கம்(59) என்பவர் உயிரிழந்தார். மற்றொரு வாகனத்தில் வந்தவர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவத்தால் பயணிகளும், பெட்ரோல் பங்க் ஊழியர்களும் அதிர்ச்சியில் அலறினர். சம்பவ இடத்துக்கு வந்த மேற்குப்பகுதி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து ஓட்டுநர் ரமேஷை போலீஸார் கைது செய்தனர்.

ஆத்துப்பாலம் சாலையில் கனரக வாகனங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பேருந்து அவ்வழித்தடத்தில் சென்றது குறித்தும் விசாரணை நடக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்