வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்பால் 2,200 ஏக்கரில் பயிர்கள் சேதம் ரூ.21 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்பால் 2,200 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்திருப்பதுடன், மொத்தம் ரூ.21 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் தாக்கத்தால் கனமழை பதிவாகியுள்ள நிலையில், முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குடியாத் தம் கவுன்டன்யா ஆற்றில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சபட்ச அளவாக 10,977 கன அடியாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், பொன்னை, அகரம் ஆறு, மலட்டாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வேலூர் பாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள் ளது. மாவட்டத்தில் உள்ள முக்கிய ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் உள்ள 15 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. அம்மணாங்குப்பம், பள்ளி கொண்டா ஏரி 95 சதவீதம் நிரம்பியுள்ளது. 6 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக நீர் நிரம்பியுள்ளது. இந்த ஏரிகளில் மொத்த நீர் இருப்பு 589.44 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் சுமார் 2,200 ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்திருப்பது தற்போதைய நிலையில் தெரிய வந்துள்ளது.

இதில், 201.45 ஹெக்டேரில் வாழை, 366.90 ஹெக்டேரில் நெல், 18.60 ஹெக்டேரில் பப்பாளி, 69 ஹெக்டேரில் நிலக்கடலை, 10.77 ஹெக்டேரில் துவரம் பருப்பு, 7 ஹெக்டேரில் உளுந்து, 48 ஹெக்டேரில் கரும்பு, 13.4 ஹெக்டேரில் கத்திரி, 130 ஹெக் டேரில் கீரை மற்றும் எலுமிச்சை,மா, கொய்யா பயிர்கள் சேத மடைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

அதேபோல், புயல் காரணமாக 423 மின்கம்பங்கள், 20 மின்மாற்றி கள் சேதமடைந்துள்ளன. 21 குடிசைகள் முழுமையாகவும், 74 குடிசைகள் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளன. 4,142 கோழி கள் உயிரிழந்துள்ளன.

மாவட்டத்தில் 39 சாலைகள், 20 கல்வெர்ட்டுகள், 3,394 தெரு விளக்குகள், 7 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் மொத்தம் ரூ.21 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்