படகில் ரூ.500 கோடி ஹெராயின் போதைப் பொருட்களை கடத்தி வந்தவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள் ளது. கைது செய்யப்பட்ட 6 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க மத்தியபோதைப் பொருள் தடுப்பு பிரிவி னர் (என்சிபி) முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடிக்கு தெற்கே கன் னியாகுமரியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் இந்திய கடல் பகுதியில் போதைப் பொருட் களுடன் சென்று கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த படகை, இந்திய கடலோர காவல் படையினர் கடந்த 25-ம் தேதி மடக்கிப் பிடித்தனர். அதிலிருந்து ரூ.500 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹெராயின் மற்றும் 20 சிறிய பெட்டிகளில் சிந்தட்டிக் போதைப் பொருட்கள், 5 நவீன துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
படகில் இருந்த இலங்கை நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40), வான குலசூரிய ஜீவன் (30), சமீரா (32), ஜீவன் பிரசன்னா (29), நிசாந் கமகே (46), லட்சுமண குமார் (37) ஆகிய 6 பேரை கைது செய்தனர். தூத்துக்குடியில் இவர்கள் 6 பேரிடமும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரி வினர் கடந்த 2 நாட்களாக விசா ரணை நடத்தினர். இந்த போதைப் பொருள், பாகிஸ்தானின் கராச்சி யில் இருந்து கடத்தி வரப்பட்ட தும், இவர்களுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 6 பேரும் தூத்துக்குடி 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் உமாதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை டிசம்பர் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் நேற்று காலை பலத்த பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல் லப்பட்டனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.
இதற்காக, மதுரை யில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய் வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago