விபத்து, மாசில்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுங்கள் மக்களுக்கு திருச்சி, பெரம்பலூர் ஆட்சியர்கள் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் வெடி விபத்தின்றி, அதிக ஒலி மற்றும் மாசு இல்லாமல் கொண்டாட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் குறைந்த ஒலி எழுப்பும் மற்றும் குறைந்த மாசு ஏற்படுத்தும் வகையிலான பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் முயற்சி எடுக்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதிபேண வேண்டிய இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நிகழாண்டும் தீபாவளி பண்டிகை நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

பொதுமக்கள் அனைவரும் விபத்தில்லாமல் மற்றும் மாசில்லாமல் தீபாவளியை கொண்டாட மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்று திருச்சி ஆட்சியர் சு.சிவராசு, பெரம்பலூர் ஆட்சியர் வெங்கடபிரியா ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்