மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரிக்கு முதல்நாள் தேரோட்டம் நடத்தக் கோரி இந்து மகா சபா சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் கடைமுக தீர்த்தவாரிக்கு முதல் நாள் தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு கரோனா ஊரடங்கு காரணமாக நவ.14-ம் தேதி தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெறவில்லை.
இந்நிலையில், தேரோட்டம் நடத்தக் கோரி அகில பாரத இந்து மகாசபா சார்பில் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவின் மாநிலத் தலைவர் ராமநிரஞ்சன் தலைமை வகித்தார்.
அப்போது, கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் 5 கோயில்களின் சுவாமிகளும் எழுந்தருளவும், தேரோட்டம் நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago