ராஜபாளையம் அருகே விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தேவதானம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் 43 அடி கொள்ளளவு கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் சில தினங்களாகப் பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கம் 42 அடியை எட்டியுள்ளது. இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி 8 கண்மாய்களுக்குப் பாத்தியப்பட்ட 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.

இப்பகுதியில் தற்போது நெல் பயிரிடப்பட்டுள்ளது. எனவே நீர்த்தேக்கத்தில் இருந்து உடனடியாகத் தண்ணீரைத் திறக்க வலியுறுத்தி தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா தலைமையில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தேவதானம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்