வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக 9 வாக்குச்சாவடிகள் அமைப்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்நடந்தது.

ஆட்சியர் மு.விஜயலட்சுமி கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் 2094 வாக்குச்சாவடிகள் உள்ளன. புதிதாக 9 வாக்குச்சாவடிகள், பாகம் சீரமைத்தல் 7, இடமாற்றம் செய்யப்படவுள்ளவை 57, கட்டிட மாற்றம் செய்யப்படவுள்ளவை 81, வாக்குச்சாவடி பெயர் மாற்றம் 64. மறுசீரமைப்புக்கு முன் உள்ள மொத்த வாக்குச்சாவடிகள் 2094. புதிதாக 9 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதை யடுத்து மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2103 ஆக உயர்ந்துள்ளது.

2021 ஜன.1-ம் தேதியன்று 18 வயது நிரம்பியோர் வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியல் நவ.11-ல் வெளியிடப் படவுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஜன. 20-ல் வெளியிடப்படும், என்று கூறினார்.

கூட்டத்தில் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்