நீர்நிலைகள் பராமரிப்பில் விவசாயிகள் ஆலோசனையை கேட்காத அதிகாரிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

விவசாயிகள் ஆலோசனையை கேட்காமல் அரசியல்வாதிகளின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் செயல்படுவதால் நீர்நிலைகள் நிரம்பாமல் உள்ளது என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜ், வேளாண்மை இணை இயக்குநர் பாண்டித்துரை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாயிகள் அந்தந்த பகுதி உழவர் மையங்களில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கலந்து கொண்டனர். போதிய மழை இல்லாததால் பழநி, தொப்பம்பட்டி பகுதியில் மக்காச்சோளம், பாசிப்பயறு, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பழநி பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

விவசாயி சுந்தர்ராஜன் பேசுகையில், விவசாயிகள் சொல்வதைக் கேட்டிருந்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பியிருக்கும். அரசியல்வாதிகளின் பேச்சைக்கேட்டு அதிகாரிகள் செயல்படுவதால் தான் மாவட்டத்தில் நீர்நிலை ஆதாரங்கள் வறண்டு கிடக்கின்றன. விவசாயிகளின் ஆலோசனையைக் கேட்டு நீர்நிலை ஆதாரங்களை சீரமைக்க வேண்டும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்