கோவை: மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் வரும் 31-ம் தேதி வரை ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்பநல சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பயிற்சி பெற்ற சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்டு ஐந்தே நிமிடத்தில் இந்த சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. கத்தியின்றி, ரத்தமின்றி எந்தவித பக்கவிளைவுகளுமின்றி இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த சிகிச்சையை ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகையாக ரூ.2,100 வழங்கப்படும். பெண்களுக்கு செய்யப்படும் குடும்பநல அறுவை சிகிச்சையைவிட இந்த சிகிச்சை பன்மடங்கு எளிமையானது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9788547625, 9789780933, 9942626687 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago