கோவை: கோவை மசக்காளிபாளையத்தில் செயல்படும் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், வகுப்பறைகள் கட்ட ஆகும் செலவில் பாதி தொகையான ரூ.26 லட்சத்தை தனியார் நிறுவனம் தமிழக முதல்வரிடம் வழங்கியது.
இதையடுத்து, மொத்தம் ரூ.52 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை, கழிவறை கட்டிடங்கள் கட்டப்படவுள்ளன. கட்டிடங்கள் அமையவுள்ள இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். மேலும், உப்பிலிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சியின் பொது நிதி ரூ.15.4 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் வகுப்பறை கட்டிடங்களையும் ஆணையர் ஆய்வு செய்தார். கிழக்கு மண்டல உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன், உதவி பொறியாளர்கள் எழில், சத்யா, மண்டல சுகாதார அலுவலர் முருகா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago