பொள்ளாச்சி - பாலக்காடு ரயில்பாதை மின்மயமாக்கல் பணி தீவிரம் :

பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம், கடந்த 2019 ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இத்திட்டத்தில் திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு (179 கி.மீ), பொள்ளாச்சி - போத்தனூர் (40 கி.மீ) ஆகிய வழித்தடங்கள் மின் மயமாக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்கு பின்னர் ரயில் இயக்க அனுமதியளிக்கப்பட்டது. தற்போது அந்த வழித்தடங்களில் மின் ரயில்கள் இயங்க தொடங்கி விட்டன.

அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மின்மயமாக்கலுக்கான தளவாடங்கள், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு வழித்தடங்களுக்கு சிறப்பு சரக்கு ரயில் வாயிலாக விநியோகிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனாட்சிபுரம் ரயில் நிலையத்தை தாண்டி மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் மின்கம்பிகள் இணைக்கப்படவில்லை. அதற்கான பணிகளும் விரைவில் துவங்கும் என மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வரும் மார்ச் மாத இறுதிக்குள், திண்டுக்கல் - பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தட மின்மயமாக்கல் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்