சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது :

கோவை: சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பு நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை எளிதாக்க வேண்டும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் பணியிடத்தில் பெண்களுக்கான கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும், தொழிலாளிக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு கோவை மாவட்ட தலைவர் சி.பத்மநாபன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட பொதுச்செயலாளர் கே.மனோகரன், மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE