பொள்ளாச்சி: பொள்ளாச்சி எஸ்.எஸ்.கோயில் வீதியில் செயல்பட்டுவரும் தனியார் துணிக்கடையில் குறைந்த விலையில் வேட்டி, சேலைகள் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கடையில் கூட்டம் திரண்டது. இதுகுறித்து, பொள்ளாச்சி நகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்துறையினருக்கு புகார்கள் சென்றன. நகராட்சி ஆணையர் தாணுமூர்த்தி, நகர்நல அலுவலர் ராம்குமார் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், செந்தில்குமார், ஜெயபார்வதி, மணிகண்டன் ஆகியோர் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். கடைக்கு வந்த கூட்டத்தை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், கடை உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “கடையில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் திரண்டுள்ளனர். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago