கோவை: கோவையில் பிளஸ் 2 மாணவி கடந்த நவம்பர் 11-ம் தேதி வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பயின்ற பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி (31) பாலியல் தொல்லை கொடுத்ததால், தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் (போக்ஸோ) வழக்குப்பதிவு செய்து மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் மிதுன் சக்கரவர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி ஜி.குலசேகரன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago