கோவை கோவை ரத்தினபுரி காவல்துறையினர், காவல் ஆய்வாளர் ராஜேஸ் கண்ணன் தலைமையில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் நின்ற நபரை சந்தேகத்தின் பேரில், காவல் ஆய்வாளர் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்நபர், காவல் ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு, மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடினார். இதுதொடர்பாக, ரத்தினபுரி காவல்நிலைய காவலர் சுகந்தராஜன் புகார் அளித்தார். விசாரணையில், தப்பியவர் ரத்தினபுரி சம்பத் வீதியைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்யபிரகாஷ்(21) என்பது தெரியவந்தது.
இவர் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். கீழே தள்ளப்பட்டதில் காயமடைந்த ராஜேஸ்கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago