கரோனா வழிமுறைகள் யுஜிசி முக்கிய அறிவுறுத்தல் :

கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி நிறுவனங்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;

நம்நாட்டில் கரோனா தொற்று பேரிடர் தொடங்கியது முதல் அதன் சூழல்களை தொடர்ந்து கவனித்து பல்கலை.கள், கல்லூரிகளுக்கு உரிய வழிமுறைகள் யுஜிசி சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர ஊரடங்கு காலத்தில் கல்லூரிகள் திறப்பு, பருவத்தேர்வுகள் உள்ளிட்ட விவகாரங்களை கையாள வழிகாட்டு நெறிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன.

நோய்த்தொற்று அச்சம்முழுவதும் விலகாத சூழலில், கல்வி நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்று மத்தியசுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள அனைத்துவித பல்கலைகழகங்கள், கல்லூரிகளும் வளாகங்களை திறத்தல்,மாணவர்களுக்கு நேரடி அல்லது இணைய வழியில் தேர்வுகள், வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளை யுஜிசி மற்றும் மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள கரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்