கரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து ரூ.50 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கான வழிமுறை எளிதாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் சார்பில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், வாரிசுதாரர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டுத் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில், ‘https://www.tn.gov.in’ என்ற தமிழக அரசின் இணையதள முகவரியில், ‘வாட்ஸ் நியூ (whats new)’ பகுதியில், ‘Ex Gratia for Covid - 19’என்ற விண்ணப்பத்துக்கான இணைப்பை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உதவித்தொகை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்