ஆழியாளம் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் : ஓசூர் எம்எல்ஏ ஆட்சியரிடம் மனு :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: ஆழியாளம் அணைகட்டில் இருந்து வனப்பகுதி

வழியாக தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ஆய்வறிக்கையை மனுவாக, ஓசூர் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ், மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டியிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றின் மூலம் கிருஷ்ணகிரி அணைக்கு செல்கிறது. சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஆழியாளம் அணைக்கட்டு உள்ளது. அணைக்கட்டில் இருந்து உபரிநீர், தருமபுரி மாவட்டத்தில் உள்ள தூள்செட்டி ஏரிக்கு கொண்டு செல்ல, கடந்த ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டது. இதனை விவசாயிகள் எதிர்த்து, வழித்தடத்தை மாற்றி ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து வனப்பகுதி வழியாக பீர்ஜேப்பள்ளி, கொம்பேப்பள்ளி வழியாக தூள் செட்டி ஏரிக்கு கொண்டு செல்ல வேண்டும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து தொடர்புடைய அலுவலர்களுடன் ஆழியாளம் அணைக்கட்டு பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு அறிக்கையை, மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளேன். இவ்வாறு எம்எல்ஏ தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், ரகுநாத், மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்