அனந்த பெருமாள் கோயிலில் மூலவர் பிரதிஷ்டை :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ரூ.30 கோடி மதிப்பில்  அனந்த பெருமாள் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை சந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய்குமார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். மகாபலிபுரத்தில்  அனந்த பெருமாள் சிலை வடிவமைக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 19-ம் தேதி, துர்கா ஸ்டாலின் பூஜைகள் செய்து அனுப்பி வைத்தார். ஊர்வலமாக போச்சம்பள்ளிக்கு கொண்டு வரப்பட்ட மூலவர், தானியத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கார்த்திகை வைகுண்ட ஏகாதசியையொட்டி கருவறையில் மூலவர் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொழிலதிபர் சஞ்சய்குமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சம்பத்குமார், சாய்நாத், ஓம்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிரேன் உதவியுடன் மூலவர் கோயில் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அனந்த பெருமாள் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதில், திமுக பிரமுகரும், தொழிலதிபர் கேவிஎஸ் சீனிவாசன், தொழிலதிபர்கள் செந்தில், கணேசன், ஒய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், சிவனாந்த் வி.கே, தீபக்பஜாஜ், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் ஓசூர் மாதேஸ்வரன், கிருஷ்ணகிரி பரிதாநவாப், ராஜ்குமார், அருண்பத்மநாபன், போச்சம்பள்ளி எஸ்கேபி தேவன், தமாக மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், சந்தூர் சக்கரவர்த்தி, பழனி, ரமேஷ், குமார் மற்றும் போச்சம்பள்ளி காவல் ஆய்வாளர் பிரபாவதி, உதவி ஆய்வாளர் மகேந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்