காவேரிப்பட்டணத்தில் அரசுப் பள்ளி திறக்க தாமதம் சாலையில் நின்ற மாணவர்கள் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நேற்று திறக்க தாமதம் ஏற்பட்டதால், மாணவ, மாணவிகள் சாலையில் அவதியுடன் நின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், கொசமேடு பகுதி குலாளர் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேலும், இப்பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் காலை மற்றும் மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் நேற்று காலை, 9 மணி வரை பள்ளிக்கு ஆசிரியர்களோ, அலுவலர்களோ வராமல் பள்ளியின் வெளிப்புற கதவு மூடியிருந்தது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் கதவு பூட்டப்பட்டிருந்ததால், வெளியே நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆசிரியர்கள் யாராவது ஒருவர் வந்து கதவையாவது திறந்திருந்தால் மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளாவது நின்றிருக்கலாம் என பெற்றோர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கூறும்போது, காலை 8.30 மணி முதலே பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வருகை தருகின்றனர். ஆசிரியர்கள் அதற்கு முன்னதாகவே வந்து பள்ளியை திறக்க வேண்டும். போக்குவரத்து நிறைந்து சாலை என்பதால் மாணவர்கள் அச்சத்துடன் நிற்க வேண்டிய நிலை உள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்