மதுரை - கோவை இன்டர்சிட்டி ரயிலை இயக்க வேண்டும் : ரயில்வே பயணிகள் சங்கம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமசிடம் தென்னக ரயில்வே பயணிகள் சங்க பொதுச்செயலாளர் பத்மநாதன் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரையில் இருந்து திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி வழியாக கோவைக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை, பழநி, பொள்ளாச்சி வழியாக ராமேசுவரம் - கோவைக்கு இயக்கப்பட்ட 2 பயணிகள் ரயில்கள் அகலப்பாதை பணிக்கென நிறுத்தப்பட்டன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் அவ்விரு ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.

நெல்லை - வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலை கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும். மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பகலில் திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் வழியாக இன்டர்சிட்டி ரயிலை இயக்க வேண்டும். மதுரையில் இருந்து வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை ஹைதராபாத்துக்கு இயக்க வேண்டும். தற்போது அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மதுரையில் கூடுதல் முன்பதிவு கவுன்ட்டர்களை திறக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்