சிபிஎஸ்இ வினாவில் பிற்போக்கு கருத்து : சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்

சிபிஎஸ்இ தலைவர் மனோஜ் அகுஜாவுக்கு மதுரை எம்ப.பி. சு.வெங்கடேசன் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தாவது:

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு கேள்வித்தாளில் ‘வாசிப்பு உரைநடை பகுதி’ இடம் பெற் றுள்ளது.

அது குடும்ப அமைப்பு பற்றி மிகவும் பிற் போக்கான கருத் துகளைக் கொண்டதாக உள்ளது.

அதில், பெண் விடுதலை என்பது குழந்தைகள் மீதான பெற்றோர் அதிகாரத்தைச் சிதைத்திருக்கிறது என்பதை மக்கள் தாமதமாகவே உணர்கிறார்கள். கணவனின் செல்வாக்குக்குக் கீழ்ப்படிதலை மனைவி ஏற்பதன் மூலமாகவே அவள் தன் குழந்தைகளிடமிருந்து கீழ்ப்படிதலைப் பெற முடிகிறது என உள்ளது. இதுபோன்ற கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

சமூக சீர்திருத்த இயக்கங்கள் இல்லையென்றால், இன்னும் சதி, குழந்தைத் திருமணம், தேவதாசி முறை போன்ற கொடூரங்கள் நீடித்திருக்கும் என்பதை அறிவோம். 1987-ம் ஆண்டு வரையிலும் கூட ‘சதி’ அரங்கேறியது. இதுபோன்று மாணவர்கள் மத்தியில் பிற் போக்கான கருத் துகளை விதைத் திருக்கின்றனர்.

அரசியல் சாசனம் வலியுறுத்தும் பாலின சமத்துவத்துக்கு எதிரான கருத்துகள் இடம்பெற்ற கேள்வி த்தாளைத் தயாரித்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்