தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் ‘மக்களைத் தேடி முதல்வர்' என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றன.
இதில், மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழியிடம் ஏராளமானோர் மனு அளித்தனர்.
பட்டுக்கோட்டை தொகுதியில் மதுக்கூர், அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலும், பேராவூரணி தொகுதியில் பெருங்களூர், பேராவூரணி, வா.கொல்லைக்காடு ஆகிய இடங்களிலும் மக்களைத் தேடி முதல்வர் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்டவை கோரி அமைச்சர் மகேஸ்பொய்யாமொழியிடம் மனு அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய காலத்தில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் அண்ணாதுரை, அசோக்குமார் மற்றும் அனைத்து அரசுத் துறையினர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago