பொள்ளாச்சி: பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில், வடுகபாளையம் பிரிவில் ரூ.55.17 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 27 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து, ரயில்வே மேம்பால பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் 8 கேரளா எல்லை வழித்தடங்கள் உள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை முறையாக கண்காணித்து தமிழகத்துக்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை ஆழ்இறங்கும் குழிகளில் பழுது ஏற்பட்டுள்ளது. நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் குழிகளை பழுது பார்த்து சீரமைக்கவேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago