தங்க சேமிப்பு பத்திர விற்பனையில்மூன்றாம் இடம் பிடித்த - கோவை அஞ்சல் கோட்டம் :

By செய்திப்பிரிவு

இந்திய அஞ்சல் துறை, தங்க சேமிப்பு பத்திரங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த நவம்பர் 29-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை நடைபெற்றது. 5 நாட்கள் விற்பனையில் தமிழகத்தில் மேற்கு மண்டலம் முதலிடம் பெற்றுள்ளது. மேற்கு மண்டலத்தில் நாமக்கல் கோட்டம் முதலிடமும், கோவை கோட்டம் மூன்றாமிடமும் பெற்றுள் ளன.

இதுகுறித்து, கோவை கோட்ட அஞ்சல் துறை அதிகாரிகள் கூறும் போது, “இந்தியா முழுவதும் நடைபெற்ற தங்க சேமிப்பு பத்திரம் விற்பனையில், 42 ஆயிரத்து 37 கிராம் விற்பனை செய்து தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.

மேற்கு மண்டலத்தில் 16,397 கிராம் விற்பனை நடை பெற்றுள்ளது. இதில் கோவை கோட்டம் ஒரு கோடியே 35 லட்சத்து 29,784 ரூபாய் மதிப்பிலான 2,824 கிராம் விற்பனை செய்து மூன்றாமிடம் பெற்றுள்ளது. உப்பிலிபாளையம் அஞ்சலக அதிகாரி சுகன்யா ரூ.30 லட்சத்து 94,986 மதிப்புள்ள 646 கிராம் விற்பனை செய்து முதலிடம் பெற்றுள்ளார்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்