பேரிடர் காலங்களில் - மக்களைப் பாதுகாக்க அரசுடன்இணைந்து செயல்படத் தயார் : எக்கி பம்ப்ஸ் நிறுவனம் தகவல்

பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்கும் பணியில் அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என எக்கி நிறுவன இணை தலைமை நிர்வாக அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிநவீன பம்ப்செட் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான ‘எக்கி பம்ப்ஸ்' தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற கடலோரப் பகுதிகளில் மழைநீரை விரைவாக வெளியேற்ற நவீன கழிவுநீர் தொழில்நுட்ப பம்புசெட்டுகளை அனைவருக்கும் வழங்கி உதவியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீரை அகற்றும் பணிக்கு, தொழில்நுட்பக் குழுவையும் அனுப்பி யுள்ளது.

எக்கி பம்ப்ஸ்-ன் போசோ வகை கழிவுநீர் பம்புகள் இம்மாதிரியான செயல்பாட்டிற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து எக்கி நிறுவன இணை தலைமை நிர்வாக அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் கூறும்போது, ‘இக்கட்டான பேரிடர் காலங்களில் எப்போதும் மக்களை பாதுகாக்கும் பணியில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம் 'என்றார். சமீபத்தில் தூத்துக்குடியில் வெள்ள நிவாரணப் பணிகளை தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டபோது, எக்கி நிறுவனத்தின் குழுவினர் வெள்ள நீரை அகற்றும் தொழில்நுட்பங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE