ஈரோடு: பவானி சுற்றுவட்டாரப் பகுதியில் சட்டவிரோதமாக நடைபெறும் லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க வேண்டும், என இந்து மக்கள் கட்சியினர் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஈரோடு மாவட்டம் பவானி, லட்சுமி நகர், காலிங்கராயன் பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், 23 இடங்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது.
கையால் எழுதப்பட்ட லாட்டரி சீட்டுகள் வாட்ஸ் அப் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே, சட்டவிரோத லாட்டரியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago