அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: அண்ணா பதக்கம் பெற தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் உயரிய விருதான பேரறிஞர் அண்ணா பதக்கம் 2022 குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ளது. உயிர்களை காப்பாற்றுவதற்காகவும் மற்றும் சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவும் தன்னலமற்ற வகையில் துணிச்சலுடன் வீர, தீர செயல்கள் புரிந்து அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்காக இவ்விருது வழங்கப்படவுள்ளது. விளையாட்டுத் துறையில் உயிர்களை காப்பாற்றுவதற்காக தன்னலமற்ற வகையில் வீர, தீரச் செயல்கள் புரிந்த தகுதியான மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பங்களை http://awards.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று (8-ம் தேதி) கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், கிருஷ்ணகிரி என்ற முகவரியில் வழங்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்