தொழில் முதலீட்டு கழக அலுவலகத்தில் - சிறப்பு கடன் திருவிழா : இன்று தொடங்குகிறது

சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நந்தனத்தில் உள்ள தொழில் முதலீட்டுக் கழகத்தின் சென்னை கிளை அலுவலகத்தில் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான 2-வது சிறப்பு தொழில் கடன் விழா இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது. இக்கடன் விழாவில், தொழில் முதலீட்டுக் கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பம்சங்கள், மாநில அரசுகளின் மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (நீட்ஸ்) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பை, புதிய தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வந்து, தொழில் கடன் மற்றும் மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE