சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் வானக்காரன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (25). இவர் ஏலச்சீட்டு, பட்டு சேலை, வெள்ளிப் பொருட்கள், அடார்னஸ் வியாபாரங்களை செய்து வருகிறார். நேற்று முன் தினம் (6-ம் தேதி) ஏலச்சீட்டுதாரர்களுக்கு பணம் கொடுக்க வங்கியில் இருந்து ரூ.5 லட்சத்தை எடுத்து வந்து கடையில் வைத்து பூட்டியுள்ளார்.
நேற்று காலை சக்திவேல் கடைக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கடையில் இருந்த ரூ.5 லட்சம் பணம், வெள்ளிப் பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கொண்டலாம் பட்டி போலீஸில் சக்திவேல் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago