நாகப்பட்டினத்தில் குளத்தில் மூழ்கி கால்நடை மருத்துவ உதவியாளர் மரணம் :

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: நாகை வெளிப்பாளையம் சுப்பையா முதலியார் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி உமாமகேஸ்வரி (47). இவர், வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் உமா மகேஸ்வரி நேற்று வெளிப்பாளையம் சிவன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்றவர், தண்ணீரில் மூழ்கி இறந்தார். தகவலறிந்து வந்த வெளிப்பாளையம் போலீஸார், உமாமகேஸ்வரியின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உமாமகேஸ்வரி குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்