திருவாரூர்: முன்னாள் படைவீரர்களுக்கு ரூ.1.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை திருவாரூர் ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படை வீரர் நலத் துறை சார்பில் நேற்று படை வீரர் கொடி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், 2 முன்னாள் படைவீரர்களுக்கு சுயதொழில் தொடங்க வங்கிக் கடன் வட்டி மானியமாக ரூ.31,705 மதிப்பிலான காசோலை, 3 முன்னாள் படை வீரர்களுக்கு தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகையாக ரூ.96,415 மதிப்பிலான காசோலைகளை ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நேற்று கொடி நாள் நிகழ்ச்சி பள்ளித் தலைமை ஆசிரியர் மு.ச.பாலு தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செ.சந்திரசேகரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மனவளக் கலை பேராசிரியர் கே.பாலசுப்பிரமணியன் கலந்துகொண்டார். ஆசிரியர் பா.ரகு நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago