திருவாரூர்: திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்டக் குழு கூட்டம் திருவாரூரில் அதன் மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணின் எதிர்கால பணிகள் குறித்து பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வை.சிவபுண்ணியம், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற நிர்வாகிகளுக்கு இக்கல்வியாண்டுக்கான உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
கூட்டத்தில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்ப வலியுறுத்தி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டக் குழுக்கள் சார்பில் டிச.11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 வரை திருவாரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago