விநாடி-வினா போட்டி: முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன திட்ட இயக்ககம் சார்பில், தமிழகத்தில் உள்ள 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்குக்கான விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டு கலசம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி பிரவீனா மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி பிரவீனாவுக்கு, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் நாகை மாவட்டச் செயலாளர் ஆர்.பிரசன்னா, பொருளாளர் கண்ணன், மாவட்ட பிரதிநிதி த.ரமேஷ் குமார் ஆகியோர் நேற்று சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்மாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்