பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களை கொண்டு அவரவர் பகுதியில் உள்ள மாணவ, மாணவியருக்கு பாடங்களை கற்பிக்க தமிழக அரசு ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பம்சம் மற்றும் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது
இந்நிலையில், ஆம்பூர் வட்டம் தேவலாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குடியிருப்புப்பகுதியில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தேவலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வெங்கடேசன், கலைகுழுவி னரின் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் துணை தலைவர் உஷாராணி மற்றும் வட்டார வளமைய மேற் பார்வையாளர் (பொறுப்பு) ஜெயசுதா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுதாகர், ஆசிரியர் பயிற்றுநர் லட்சுமி தேவி, அறிவொளி ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தேவலாபுரம் தொடக் கப்பள்ளி தலைமையாசிரியர் வெங் கடேசன் வரவேற்றார். மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் சிறப் புரையாற்றினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் செல்வி ஜெயசுதா, ராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விசை தொண்டு நிறுவனம் தலைவர் அறிவொளி ஆனந்தன் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், இவ்விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago