உடுமலை –பழநி சாலையில் மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டிய காலியிடத்தில் கடந்த 2015-ல் அலுவலகத்துடன் கூடிய வருவாய் துறை சர்வேயர் குடியிருப்பு கட்டப்பட்டது. கட்டி முடித்து 6 ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரையிலும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘உடுமலையை சேர்ந்தமக்கள் எளிதில் அணுகும் வகையில் பேருந்து நிலையத்தை ஒட்டியே சர்வேயர் அலுவலகம் கட்டப்பட்டது.கட்டி முடித்து 6 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஏற்கெனவே பலமுறைதொடர்புடைய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும்இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. திறக்கப்படாத இந்தஅலுவலகத்துக்குள் அசம்பாவிதம் நிகழ்வதற்குள், கட்டிடத்தைதிறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago