நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான்ரக கரோனா தொற்று பரவாமல்இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் ச.பா.அம்ரித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் ஒமைக்ரான் ரக கரோனா பரவாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன்.
கேரளா, கர்நாடகா சோதனைச்சாவடிகளில் சுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய் துறை அலுவலர்களுடன் ஒரு மருத்துவர் பணியமர்த்தப் பட்டுள்ளனர். அந்த மாநிலங் களிலிருந்து வரும் வாகனங்கள்கண்காணிக்கப்படுகின்றன.
ஒமைக்ரான் தொற்றால்பாதிக்கப்பட்ட வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்கிறோம்.
நீலகிரி மாவட்டத்துக்கு இதுவரை யாரும் வரவில்லை.வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் 8 நாட்கள் வீட்டிலேயேதனிமைப்படுத்த வலியுறுத்தப்படுவர். 8 நாட்களுக்கு பின்னர் அவர்களுக்கு பரிசோதனை செய்து, கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்கப் படுவர்.
நீலகிரி மாவட்டத்தில் தினமும்1,800 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்டால், அந்நபருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுகிறது. மாணவர் களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால், பள்ளிகள் 5 நாட்கள் மூடப்படுகின்றன.
அரசின் கரோனா வழிகாட்டுமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கரோனா முதல் தவணை தடுப்பூசி 5.2லட்சம் டோஸ்களும், இரண்டாம் தவணை 4.5 லட்சம் டோஸ்களும் போடப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை படுக்கைகள் மற்றும் கரோனா வார்டுகளும் தயாராக உள்ளன.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago