வணிகவரித் துறையின் வாகன தணிக்கை மூலம் கடந்த ஒரு மாதத்தில் ரூ.5.81 கோடி வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வணிகவரித் துறையின்புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை வலுவாக்குவது, ரோந்துக் குழுக்களைக் கொண்டு வாகனங்களை தணிக்கை செய்வது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த அக். 25-ம் தேதி முதல் நவ. 28-ம் தேதி வரைதமிழகத்தில் உள்ள அனைத்துவணிகவரி நுண்ணறிவுப் பிரிவுஅலுவலகங்கள் மூலம் 53,055வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 66,372 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டன.
இதில், வழிப்பட்டியல் இல்லாமல் சென்ற 1054 வாகனங்களுக்கு வரி அல்லது அபராதமாக ரூ.5.81 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வரும் வரி வருவாய், ஏய்ப்புகள் இன்றி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் தணிக்கை நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago